டிச.1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சரவை மற்றும் குழந்தைகள் பணிக்குழுவுடன் ஆலோசித்த பின்னர் முதல்வர் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சரவை மற்றும் குழந்தைகள் பணிக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர், கிராமப்புறங்களில் 1-4 ஆம் வகுப்பு மற்றும் நகர்ப்புறங்களில் 1-7ம் வகுப்பு வரை பள்ளிகளை டிசம்பர் 1 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது என்று மகாராஷ்டிர கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

நேரடி வகுப்புகள் மாணவர்களுக்கு கட்டாயமில்லை. மேலும், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும், தேவையான சமூக இடைவெளியை பாரமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலை டிசம்பரில் எதிர்பார்க்கப்படும் போது, அது லேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!