தமிழகத்தில் பகல் 12 மணி முதல் அனைத்து கடைகளும் மூட உத்தரவு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு ஓர் புதிய திட்டத்தை அமல் படுத்தி உள்ளது. கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய கட்டுப்பாடுகள் அமல்!!

காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மளிகை, பால், போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் என்றும், உணவகம் மற்றும் மருந்து கடைகள் இரவு 9 மணி வரையும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதனை மக்கள்  அனைவரும் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.