என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 1ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:

என்ஜினீயரிங் கல்லூரியில் இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், துணை கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் முழுநேர பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகள் மையம் தெரிவித்து இருக்கிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின்னர் படிப்புக்கான வகுப்புகள் இட வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்துவது பற்றி முடிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!