அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!! மாணவர்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்படும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு தற்போது ஒரு தாளுக்கு மறுமதிப்பீடு செய்ய 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக பணிக்கு GST:

மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  அதன்படி,  மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது,   விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கு, எந்த தேதியில் மாணவர் பட்டம் பெற்றார் என்பதற்கு சான்று அளிக்கும் சான்றிதழ்கள் போன்ற  16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்,  புரோவிஷனல் சான்றிதழ், டிகிரி சான்றிதழ், ரேங்க் சான்றிதழ், மறு ஆய்வு கட்டணம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!