அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு!

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு:

அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுபாட்டில் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.

அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 3, 5 மற்றும் 7 ஆகியவற்றின் செமஸ்டர் முடிவுகளை அண்ணா  பல்கலைகழகம் வெளியிட்டது. ஆனால் சில கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைகழகம் வெளியிடவில்லை. இதனால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

முடிவுகள் தாமதமாக காரணம்:

இது குறித்து காரணம் கேட்டபோது அண்ணா பல்கலைகழகத்தின் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு பேராசிரியர்களுக்கென ஒரு தொகை கொடுக்கப்படும், அதன் விவரங்களை சில கல்லூரிகள் தரவில்லை என கூறப்பட்டது. இதனால் சில  பொறியியல் கல்லூரிகளில் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைகழகம் வெளியிடவில்லை.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு வழங்கும் தொகையினை பற்றி சம்பந்தப்பட்ட கல்லூரிகள் அண்ணா  பல்கலைகழகதுக்கு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என அண்ணா பல்கலை கூறியிருந்தது.  இதனால் 18 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

முடிவுகள் வெளியிட உத்தரவு:

பல கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்குள் குழப்பம் அடைந்தனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை வெளியிட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலை கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் தேர்வு முடிவுகள் சீக்கிரம் வெளியாகுமென எதிர் பார்க்கபடுகிறது.

Scroll to Top