அண்ணா பல்கலை மாணவர்களுக்கு தேர்வுக்கான கால அட்டவணைவெளியீடு!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு குறித்த அட்டவணை பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (டிச.13) வெளியிடப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை (டிச.13) வெளியிட்டிருக்கிறது. அதன் படி, சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும், திருச்சி, கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்போது அண்ணா பல்கலைக்கழத்தில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயின்று வரும் அனைத்து இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு கால அட்டவணை https://aucoe.annauniv.edu/timetable.php என்ற அண்ணா பல்கலைக்கழத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் செமஸ்டர் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!