நவ.6-ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு!!

தமிழக அரசு அறிவிப்பு:

பள்ளிக் கல்வி ஆணையர் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ”தீபாவளியை ஒட்டி நவம்பர் 5 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வரும் சனிக்கிழமை அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், 06/11/2021 சனிக்கிழமை அரசு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!