ஓணம் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! நாளை தொடக்கம்!

சிறப்பு ரயில்கள்:

கேரளாவில் சிறப்பான பண்டிகைகளில் ஒன்றாக செப்டம்பர் 8ம் தேதி அன்று ஓணம் பண்டிகையை முக்கிய தினமாக கொண்டாப்பட உள்ளது. அதனால் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வருகிற 10ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் – ஹைதராபாத் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை இரவு 11.30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் என்றும் மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்திலிருந்து 9ம் தேதி மதியம் 2:20 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இதனை தொடர்ந்து வருகிற 10ம் தேதி அன்று காலை 8 மணி அளவில் திருநெல்வேலி – பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் என்றும் இந்த ரயில் பாலக்காடு, கோவை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!