கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிப்பு!!

 உயர் கல்வித்துறை அறிவிப்பு: 

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நாட்கள் குறித்து உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

அதில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும் என்றும், இதேபோல்  முதுகலை, முதுநிலை  2ம் ஆண்டு மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள்  நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கலை அறிவியல்,  பொறியியல், சட்டம், விவசாயம் சார்த்த 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில்  வகுப்புகள் நடைபெறும்.
  • 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!