1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் முதல் பருவ தேர்வுகள் நடந்து முடிந்து விட்ட நிலையில், அக்டோபர் 18ம் தேதி முதல் இரண்டாம் பருவம் தொடங்கப்பட உள்ளது. ஆனால் இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் பருவம்:

முதல் பருவத்திற்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 18ம் தேதியான இன்று முதல் இரண்டாம் பருவம் தொடங்க இருக்கிறது. இரண்டாம் பருவ தேர்வுகள் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது.

மேலும், நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

ஆனால் இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை இன்னும் விநியோகிக்கவில்லை. ஏற்கனேவே கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் கற்றல் நேரங்கள் குறைந்துள்ளது.

கல்வியாளர்கள் கோரிக்கை தெரிவிப்பு:

பள்ளிக்கல்விதுறையினர் பாட புத்தகங்களை தாமதமாக வழங்குவதால் மேலும், பாடங்களை நடத்துவதற்கு கால தாமதம் ஆகலாம். இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு உரிய காலத்தில் வகுப்புகள் எடுக்க ஏதுவாக விரைவில் பாட புத்தக வினியோகத்தை துவக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!