இ-பதிவு எதற்கெல்லாம் அனுமதி உண்டு!! எதற்கெல்லாம் அனுமதி இல்லை!!

இ-பதிவு எதற்கெல்லாம் அனுமதி இல்லை!!

தமிழகத்தில் கொரானா பரவல் காரணத்தினால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுந்த காரணங்கள் மூலம் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இக்காரணங்களில் திருமணம் தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளது.

இ-பதிவு எதற்கெல்லாம் அனுமதி உண்டு:

தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்டம் விட்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் இறப்பு, மருத்துவம்,  போன்ற முக்கிய காரணங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

பிறகு திருமண காரணங்களை கூறி அனைவரும் இ-பதிவு செய்வதால் அரசு திருமணம் என்ற காரணத்தை நீக்கியது. பிறகு பல்வேறு மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு இன்று காலை மீண்டும் திருமணம் காரணம் இ-பதிவு இணையதளத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் அரசு தற்போது மீண்டும் திருமணம் என்ற பிரிவு இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.