MBA, MCA சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்ப பதிவு!

MBA, MCA முதுநிலை பட்டப் படிப்பு:

MBA மற்றும் MCA முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

2021-2022ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள்: 

  • அரசு
  • அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள்
  • அண்ணா பல்கலைக் கழகம் 
  • துறைகள் (University Departments) 
  • வட்டார மையங்கள் (Regional Centers) 
  • அண்ணாமலை பல்கலைக்கழகம் 
  • சென்னைப் பல்கலைக்கழகம் 
  • இதர பல்கலைக்கழகங்கள்
  • சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 
  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
  • எம்.பி.ஏ. / எம்.சி.ஏ.

முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன்  http://www.gct.ac.in / http://www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புகளுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய தொடங்கும் தேதி 11.08.2021, முதல் முடிவடையும் தேதி 31.08.2021.
  • பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
  • இந்தக் கல்வியாண்டில் MBA / MCA முதுநிலைப் பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
  • மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும்.
  • கூடுதல் தகவல்களுக்கு 0422 – 2451100

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.