மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் நடக்கவுள்ளது.
இதற்கான பாடத்திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு தேதிகள் உள்ளிட்ட விபரங்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 20 ஆம் தேதியில் வெளியிடப்படும்.
தகுதி தேர்வு:
1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும்,
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும்,
இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.
தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்துவதற்கு அக்டோபர் 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ஒரு தாள் எழுத விரும்பினால் ரூ.1000,
இரண்டு தாளும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத விரும்பினால் ரூ.500,
இரண்டு தாளும் எழுத விரும்பினால் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!