கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு – அக்.8 கடைசி நாள்!

தமிழகத்தில் கால்நடை படிப்புகளில் சேர நேற்று வரை 18,758 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கால்நடை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

கால்நடை படிப்புகள்:

இன்று முதல் பொறியியல் கல்லூரிகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. மற்ற படிப்புகளை தொடர்ந்து கால்நடை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. கால்நடை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது.

கால்நடை பல்கலைக்கழகம் தெரிவிப்பு:

இந்த நிலையில் கால்நடை படிப்புகளில் சேர நேற்று வரை 18,758 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கால்நடை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அக்.8 வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NRI மாணவர்கள் வரும் நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இணையதளம் மூலம் தெரிவிப்பு:

மேலும் இணையதளம் வாயிலாக சேர்க்கை தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றம்‌ இதர விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!