தமிழகத்தில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் நியமனம் – எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால். தமிழகத்தில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக 2,100 சுகாதார பணியாளர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதார பணியாளர்கள்:

கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் அதிகமாக பரவி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான இது தீவிரமாக பரவி வருகிறது. அரசு ஊரடங்கை அறிவித்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. நாட்டை தூய்மைப்படுத்தும் பணியிலும் அரசு இறங்கியுள்ளது. தற்போது பரவி வரும் வைரசை ஊரடங்கால் மட்டுமே ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை கூறுகிறது.இதனால் அரசு ஊரடங்கை அறிவித்து பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல தடை விதித்துள்ளது. இந்த காலகட்டத்திலும் சுகாதார பணியாளர்கள் வெளியில் சென்று வேலை செய்கின்றனர். வைரஸ் பரவி வருவதால் மக்கள் சுகாதாரமாக இருக்க அரசு அறிவுறுத்துகிறது. நாட்டை தூய்மைபடுத்தும் பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இவர்களது பணி ஒப்பற்ற பணியாக கருதப்படுகிறது.இந்நிலையில் தமிழக அரசு தற்காலிகமாக 2,100 சுகாதார பணியாளர்களை பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே சுகாதார பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் 6 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில் 2,100 தற்காலிக சுகாதார பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.