தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் முதலமைச்சர் தலைமையில் மருத்துவர் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் சார்ந்த நடவடிக்கை:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை முற்றிலும் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வகுப்பறைக்கு கட்டிடங்கள் தேவைப்பட்டால் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஓமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த ஆலோசனை முடிவில் சுழற்சி முறை இன்றி வகுப்புகள் நடைபெறுவது குறித்தும் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!