இரத்ததானம் செய்பவரா நீங்கள்? இதை உடனே பாருங்க!!

இரத்ததானம் செய்பவர்கள் கவனத்திற்கு

இந்தியாவில் தற்போது 18 வயதில் முதல்  44 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரிவித்துள்ளனர். இதனால்  ரத்த தானம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அடுத்து வரும் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் ரத்த மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தப்பட வேண்டிய நோயாளிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டு கொள்வதற்கு முன்பாக ரத்த தானம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.