12ம் வகுப்பு தேர்வெழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

மதிப்பெண் சான்றிதழ்:

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 25ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11, 12 ஆகிய இரண்டு வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும். முழுமையாக தேர்ச்சி பெறாமல் ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வியுற்றிருந்தால் 11, 12 இரு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

பழைய திட்டத்தின் படி 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்களுக்கு நிரந்தர பதிவு எண்ணுடன் ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ் குறித்த விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!