மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

வீடுகளில் மின் ஊழியர்கள் மின் பயன்பாட்டை கணக்கெடுத்த தேதியில் இருந்து 20 நாட்களுக்கு பின் மின் கட்டணம் செலுத்த வேண்டும். 20 நாட்கள் தாண்டியும் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு மின் விநியோகத்தை நிறுத்துமாறு பொறியாளர்களுக்கு தமிழக மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்வாரியம் அறிவிப்பு:

இதனால் அந்த மாதங்களுக்கான மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அனுமதிக்கப்பட்டன. மேலும் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

தற்போது மின் வாரியத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மின் கணக்கிட தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகளில் மின் இணைப்பை துண்டிக்குமாறு மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாத 87 ஆயிரம் மின் இணைப்புகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின் இணைப்புகள் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மின் வாரியத்திற்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக முறையாக ஆய்வு செய்து அந்த மின் இணைப்பு கணக்குகளை முடிக்குமாறு மின்வாரியம் உத்தரவு விட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!