தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் கோவில்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!