அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு!! பணிமாறுதல் கலந்தாய்வு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான ஆசிரியர் விபர பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம்:

ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த பணி மாறுதல் கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் இந்த கலந்தாய்வு மூலம் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தொழிற்பிரிவுக்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட உள்ளனர்.

அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற முழு விபரங்களையும் சேகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அவர்கள் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். இத்தகைய ஆய்வு பட்டியலை பிழையின்றி தயார் செய்து அனுப்புமாறும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!