ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு தேங்காய் எண்ணெய் விநியோகம்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யுமாறு விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் விவசாயிகள் வாழ்வு செழிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்:

தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டு பொருட்களுக்கு கொடுக்கும் சலுகையை உள்ளூர் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு அரசு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதாவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால் உள்ளூரில் விவசாயம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற கடலெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகளை அரசு சலுகை வழங்குவதில்லை. அதனால் அரசு அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் இவற்றை விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் இத்தகைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விவசாயிகள் வாழ்வு செழிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!