ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி விபரங்கள் சேகரிப்பு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களிடம் குடும்பத்தில் உள்ளவர்களின் தடுப்பூசி செலுத்திய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

ரேஷன் கார்டு:

தடுப்பூசி செலுத்துவதில் முழு இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் வாரந்தோறும் ஞாயிற்று கிளைகளில் மெகா தடுப்பூசி திருவிழாவை அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்களிடம் குடும்ப உறுப்பினர்களின் தடுப்பூசி செலுத்திய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் விவரமும் சேகரிக்கப்படுகிறது. முழு விவரம் பெற்றபின் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!