தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

தமிழகத்தில் மின் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது ஊதியம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மதுரை மண்டல மின்பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மின் ஊழியர்கள்:

மின்சாரத் துறையில் பணிபுரியும் மின் ஊழியர்கள் வரும் டிச.7ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தகவல் வெளியானது.

இந்த முடிவானது கடந்த 26ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தடுப்பூசி செலுத்த முடியாத உடல் நலக்குறைபாடு உடைய நபர்கள் அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு சான்றிதழ் சமர்பிக்காத ஊழியர்களுக்கும் டிசம்பர் மாதம் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஊதியம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!