தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – விரைவில் கலந்தாய்வு!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 15ம் தேதிக்குள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உட்பட அனைத்து வகை கலந்தாய்வுகளும் நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலந்தாய்வு:

ஆசிரியர்கள் இல்லாததால் கற்பித்தல் பணி பள்ளி நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கலந்தாய்வுகளும் நடைபெறவில்லை.

இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அதனால் எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 1 முதல் 15ம் தேதிக்குள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உட்பட அனைத்து வகை கலந்தாய்வுகளும் நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!