தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – போட்டித் தேர்வு ரத்து?

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

போட்டித் தேர்வு ரத்து:

TET தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று இதுவரை பணி நியமனம் செய்யப்படாமல் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த ஆட்சியில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மீண்டும் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இதனை வன்மையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எவ்வித போட்டித்தேர்வுகளும் இல்லாமல் பணி நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகியும் ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித்தேர்வு ரத்து செய்வது குறித்து எவ்வித தகவலும் வெளியிடவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் அவர்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு என்பது சட்டத்திற்கு முரணாக உள்ளது. எனவே விரைவில் போட்டித்தேர்வை ரத்து செய்து பணி நியமனம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!