TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தபட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

TET ஆசிரியர் தகுதித் தேர்வு:

இந்த ஆண்டில் தமிழக அரசு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அதாவது தேர்ச்சி மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிக்கை கூறப்பட்டிருந்தது. மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் எதன் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் நியமனத்தேர்வு குறித்த பாடத்திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியிடுமாறு கோரிக்கைகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20.07.2018 – ன் படி போட்டித் தேர்வின் மூலம் தேர்வு பணி மேற்கொள்ளப்படும். இது குறித்த அறிக்கைகள் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மொபைல் மூலமாக இந்த செய்தியை தெரிவித்தார். அத்துடன் இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனால் 8 ஆண்டுகளாக அரசு பணிக்கு காத்திருந்த 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.