பொங்கல் பரிசுத் தொகுப்பில் புதிதாக சேர்ந்த ஆவின் நெய்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இந்த வருடம் ஆவின் நிர்வாகம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் செவ்வாக்கிழமை வெளியிட்ட செய்தி: 

20 மளிகைப் பொருள்கள்:

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருள்களும் அடங்கிய துணிப்பை (20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு), மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில், இரண்டு கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

புதிதாக சேர்ந்த நெய்!

மேலும், இவற்றுடன் ஒரு முழு கரும்பும், முதன்முறையாக நெய் பாக்கேடும் சேர்த்து வழங்கப்படவுள்ளது. இந்த பரிசுத் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மண்டல வாரியாக கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.

பயோ மெட்ரிக் முறை:

தமிழ்நாட்டில் பயோ மெட்ரிக் முறையைப் பயன்படுத்தி 97 விழுக்காடு மக்கள் நியாய விலைப் பொருள்களை பெற்று வருகின்றனர். அதேபோன்று இந்தப் பரிசுத் தொகுப்புகளையும் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!