பிஇ மற்றும் பி.டெக் கவுன்சலிங் தேதி அட்டவணை வெளியீடு!!

B.E மற்றும் B.Tech கவுன்சிலிங் அட்டவணை:

பிஇ, பி.டெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங்கில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 17ம் தேதி வரை 4 கட்டமாக நடக்கும் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவிப்பு:

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் 1,36,973 பேர் கலந்து கொள்ள வேண்டிய கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி,

1 முதல் 14,788 வரை உள்ளவர்களுக்கு செப்.,27 முதல் அக்., 5ம் தேதி வரை முதல் சுற்று கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும்.

14,789 முதல் 45227 எண் வரை அக்., 1ம் தேதி முதல் அக்.,9ம் தேதி வரை 2ம் சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

42228 முதல் 86228 வரை உள்ளவர்கள் அக்டோபர் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும் 3வது சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.

86119 முதல் 136973 வரை உள்ளவர்கள் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை நடக்கும் 4வது சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!