வங்கி ஊழியர்கள் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்!!

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து 2வது நாளாக இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 9 சங்கங்களை சேர்ந்த சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுத்துறை வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் எல்.ஐ.சி. ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து 90 ஆயிரம் வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டின் போது 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதற்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!