இனி வரும் வாரங்களில் 10 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறையா!!

தற்போது நடந்து கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வருவதால், அடுத்த வாரங்களில் வங்கிகள் சில நாட்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். அதனால் வாடிக்கையாளர்கள் விரைந்து வங்கி சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி விடுமுறை:

இதைத் தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் வாரத்தில் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

  • அக்டோபர் 12 – துர்கா பூஜையை முன்னிட்டு அகர்தலா மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 13 – துர்கா பூஜை மற்றும் மகா அஷ்டமி தினத்தன்று அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 14 – துர்கா பூஜை, தசரா, மகா நவமி மற்றும் ஆயுத பூஜையையொட்டி அகர்தலா, பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 15 – துர்கா பூஜை, தசரா மற்றும் விஜய தஷமியை முன்னிட்டு இம்பால் மற்றும் சிம்லா தவிர அனைத்து நகரங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 16 – துர்கா பூஜையையொட்டி கேங்டாக்கில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 18 – கேடி பிஹு காரணமாக கவுகாத்தியில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 19 – முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு அகமதாபாத், பெலாப்பூர், போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்தநாள், லக்ஷ்மி பூஜை, ஐடி-இ-மிலாத் பண்டிகையையொட்டி அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 22 – ஈத்-இ-மிலத்-உல்-நபியைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 26 – இணைப்பு தினத்தன்று ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.

இந்த விடுமுறைகள் தவிர, வங்கிகள் அக்டோபர் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் காரணமாக மூடப்படும். தொடர்ந்து அக்டோபர் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை காரணமாக வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!