அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21  நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி (RBI) தனது வருடாந்தர நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

வங்கி விடுமுறை:

 • அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை.
 • அக்டோபர் 3 – ஞாயிறு, பொது விடுமுறை.
 • அக்டோபர் 6 – மஹாளய அமாவாஸ்யே தினத்தன்று மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
 • அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி தினத்தன்று திரிபுரா, மேற்கு வங்கம், மேகாலயா மாநிலங்களில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • அக்டோபர் 9 – 2 வது சனிக்கிழமை, பொது விடுமுறை.
 • அக்டோபர் 10 – ஞாயிறு, பொது விடுமுறை.
 • அக்டோபர் 12 – துர்கா பூஜையை முன்னிட்டு மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
 • அக்டோபர் 13 – துர்கா பூஜையை முன்னிட்டு மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மணிப்பூர், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
 • அக்டோபர் 14 – தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பீகார், அசாம் மாநிலங்களில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • அக்டோபர் 15 – துர்கா பூஜை, தசரா, விஜய தஷமி காரணமாக மணிப்பூர், இமாச்சல பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
 • அக்டோபர் 16 – துர்கா பூஜையை முன்னிட்டு சிக்கிம் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
 • அக்டோபர் 17 – ஞாயிறு, பொது விடுமுறை.
 • அக்டோபர் 18 – கதி பிஹு காரணமாக அசாம் மாநிலத்தில் வங்கிகள் மூடப்படும்.
 • அக்டோபர் 19 – நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகண்ட், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை காரணமாக திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா, இமாச்சல பிரதேசத்தில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • அக்டோபர் 22 – ஈத்-இ-மீலாத்-உல்-நபியை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் பகுதியில் வங்கிகள் மூடப்படும்.
 • அக்டோபர் 23 – 4 வது சனிக்கிழமை, பொது விடுமுறை.
 • அக்டோபர் 24 – ஞாயிறு, பொது விடுமுறை.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!