இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!! முழு விவரத்துடன்!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 24ம் தேதியான இன்று முதல் பல்வேறு மாநிலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் வங்கிக் கிளைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வங்கி விடுமுறை:

வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கிச் செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படும். வாடிக்கையாளர்கள் அவசர வங்கி பணிகளை ஆன்லைன் முறையில் செயல்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த மாதத்தில் வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ம் தேதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை நாட்கள்:

  • டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ் விழா (கிறிஸ்துமஸ் ஈவ்)
  • டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்
  • டிசம்பர் 26 – ஞாயிறு
  • டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
  • டிசம்பர் 30 – யு கியாங் நங்பா
  • டிசம்பர் 31 – புத்தாண்டு ஈவ்

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!