வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு செயல்படாது!! என அறிவிப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவல்:

செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அம்மாதத்தில் சுமார் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விடுமுறை பட்டியலையும் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

RBI விடுமுறை நாட்கள்:

இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி, ஆகஸ்ட் மாதத்திலும் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை பட்டியலில், ஏழு நாட்கள் மாநிலங்களுக்கான விடுமுறைகளும், மற்ற நாட்கள் வார இறுதி நாட்கள், மத நிகழ்வுகள், பண்டிகை விடுமுறைகளும் அடங்கும்.

செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கான வங்கி விடுமுறைகளை பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி உத்தரவின் படி செப்டம்பர் 2021 மாதத்திற்கான முழு விடுமுறை நாட்களின் பட்டியல் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • செப்டம்பர் 5 ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை.
  • செப்டம்பர் 8 ஆம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 9 ஆம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • செப்டம்பர் 10 ஆம் தேதி – விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • செப்டம்பர் 11 ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 12 ஆம் தேதி – ஞாயிறு பொது விடுமுறை.
  • செப்டம்பர் 17 ஆம் தேதி – கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.
  • செப்டம்பர் 19 ஆம் தேதி – ஞாயிறு பொது விடுமுறை.
  • செப்டம்பர் 20 – இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 21 ஆம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • செப்டம்பர் 25 ஆம் தேதி – நான்காவது சனிக்கிழமை, விடுமுறை நாள்.
  • செப்டம்பர் 26 ஆம் தேதி – ஞாயிறு பொது விடுமுறை நாள்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!