வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் செயல்படாது!! என அறிவிப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவல்:

இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டின் தொடக்கத்திலேயே மாதாந்திர விடுமுறை தினங்களின் பட்டியலின் வகையில் செப்டம்பர் மாதம் முழுவதும் 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6 நாட்கள் வழக்கமான வார இறுதி விடுமுறை தினங்களாகவும், இந்த வாரத்திலேயே தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சில நகரங்களில் மட்டுமே விடுமுறை தினங்கள் மாறுபடுகின்றது.

வங்கி விடுமுறை

இதனால் பொதுமக்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தின பட்டியலை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RBI யின் விடுமுறை நாட்களுக்கான பட்டியல்:

  • செப்டம்பர் 8 – கௌஹாத்தியில் ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
  • செப்டம்பர் 9 – ஹரித்தலிகா தீஜ் காரணமாக கேங்டாக்கில் வங்கி கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
  • செப்டம்பர் 10 – அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
  • செப்டம்பர் 11 – இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து நகரங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
  • செப்டம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!