வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்களுக்கு செயல்படாது!! என அறிவிப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவல்:

இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி, இம்மாதத்தில் வரும் 14 நாட்களில் சுமார் 9 நாட்கள் வரை நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

இந்த 15 நாட்களில் வார இறுதி விடுமுறைகள், மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறைகள் ஆகியவையும் அடங்கும். இருப்பினும், இந்த வங்கி விடுமுறை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

RBI யின் விடுமுறை நாட்களுக்கான பட்டியல்:

ஆகஸ்ட் 19 ஆம் தேதி மொஹரம் பண்டிகை காரணமாக அஷூரா பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி மொஹரம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருவோணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சி பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்படும்.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஞாயிறு பொது விடுமுறை.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் கொச்சி பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை ஆனதால் வங்கிகளுக்கு பொது விடுமுறை.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஞாயிறு பொது விடுமுறை.

ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி காரணமாக ஐதராபாத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!