தடுப்பூசிகள் மூலம் இவ்வளவு பேரை காப்பாற்ற முடியுமா? உலக சுகாதார மையம் விளக்கம்!!

உலக சுகாதார மையம் விளக்கம்:

சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பல உயிருக்கு ஆபத்தான நோய்களை நாம் தவிர்க்க வேண்டுமானால்  தடுப்பூசி  மூலம் ஐந்து கோடி பேரின் உயிர்களை காப்பாற்றலாம் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

கொடிய நோய்கான தடுப்பூசி பணிகள்:

மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ? ஆனால் கொரோனாவுக்கு மட்டுமே உலக நாடுகளின் மக்கள் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதால் இந்த  அம்மை மற்றும்  மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தவிர மற்ற வழக்கமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் 2030 வரைக்கும்  ஐந்து கோடி மக்களையும்  காக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 இனிமேலும் தாமதிக்க வேண்டாம்: 
  • இந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல கோடி குழந்தைகளுக்கு அடிப்படை தடுப்பூசிகள் கூட செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
  • எனவே அனைவரும் தடுப்பூசி போட்டு  கொள்ள வேண்டும் என சுகாதார மையம் வலியுறுத்துகிறது.