இந்தியாவில் 2-வது அலையாக வேகம் எடுக்கும் கொரோனா!
கொரோனாவால் இந்தியாவின் நிலைமை மிக மோசமான நிலைமைக்கு மாறி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் கொரோனா ஊசி போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல் அளித்துள்ளது.
கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா அறிவிப்பு!
தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்திய பயணிகள் கனடாவுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. இதே போல் பாகிஸ்தானில் இருந்து கனடாவுக்கு வரும் பயணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது.
மக்கள் இதை கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே கொரோனவை ஒழிக்க முடியும்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!