பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் ரத்து!! இனி நேரடி தேர்வு!!

பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை நேரடியாக வரவழைத்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டு வந்த தேர்வுமுறை கைவிடப்படுகிறது.

இனி, அனைத்து வகை உயர்கல்வி தேர்வுகளும் வழக்கம் போல் நேரடியாக கல்வி நிலையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்றன. அதேபோல, கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியில் பொறியியல் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!