இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் ரத்து! யுஜிசி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது வந்தது.

தற்போது கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. எனவே, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அறிவித்தன. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நாடு முழுவதும் கல்லூரி, பல்கலை கழகங்களில் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடத்தப்பட வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!