பொறியியல் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நடப்பாண்டில் ரத்து!!

பிஇ., பிடெக்., பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் தரவரிசை அடிப்படையில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து நவம்பர் மாதம் உத்தரவிட்ட நிலையில் 2 ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் 2021-22 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 4 சுற்றுகளாக செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான துணைக் கலந்தாய்விற்கு அக்டோபர் 14ஆம் தேதி 19ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடத்துவதற்கான காலக்கெடு நவம்பர் 31 ந் தேதியுடன் முடிவடைந்ததாக அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் தெரிவித்துள்ள நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற காரணங்களால் நடப்புக்கல்வியாண்டில் 2ம் கட்டமாக கலந்தாய்வு நடத்துவதில்லை என உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மேலும் அடுத்தக் கல்வியாண்டு முதல் பாெறியியல் மாணவர்கள் சேர்க்கையில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் 2 ம் கட்டமாக மாணவர்கள் சேர்க்கை நடத்தும் வகையில் கலந்தாய்வு நடத்துவதற்கும் உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!