தமிழகத்தில் மாநில அளவிலான காலாண்டு தேர்வு ரத்து? விவரம் உள்ளே!

காலாண்டு தேர்வு:

தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு முறையில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் திருப்புதல் தேர்விற்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இதனை தடுக்கும் விதமாக நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது தமிழகத்தில் வழக்கமாக காலாண்டு தேர்வு மாநில அளவில் நடைபெறும். அத்துடன் அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்விற்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.

ஆனால் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) மாநில அளவிலான பொது காலாண்டுத் தேர்வு நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்குரிய கால அட்டவணை மாறுபாட்டுள்ளது. அதன்படி இம்முறை காலாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே மாதிரியாக நடைபெறாது என கூறப்படுகிறது. மேலும் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு முடிந்த பிறகு வழக்கமான விடுமுறை நாட்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!