பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பானை வெளியிட்டதாகவும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வு நாளை (டிசம்பர் 8) தொடங்கி வரும் 12ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிபிட்டுள்ளார்.

த்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் மொழிப்பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விதிமுறை உள்ளதாகவும், அவ்வாறு தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வில் பணி கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சிப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது மனு குறித்து தமிழ்நாடு அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!