CBSE வாரியத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பிளஸ் 2 துணைத்தேர்வுகள் தொடக்கம் என அறிவிப்பு!

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் துணை தேர்வுகள் தொடங்க இறுதிப்பதாக கல்வி வாரியம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

CBSE வாரியம்:

இதனால் முன்னதாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாட திட்டம் குறைக்கப்பட்டு மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த கல்வி வாரியம் திட்டமிட்டது. ஆனால் தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யட்டப்பட்டது. இதனால் மாற்று முறையில் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவு செய்து அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டது.

இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே துணை தேர்வுகள் நடக்க இருப்பதாகவும், தேர்வுக்கான விண்ணப்ப விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!