CBSE முதல் பருவ பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!!

CBSE தெரிவிப்பு:

CBSE பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு எழுத 36 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4 லட்சம் மாணவ மாணவியர் கூடுதலாக பதிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ (CBSE) 10,12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ள நிலையில், பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கிய MCQ எனப்படும் multiple choice questions என்ற வகையில் வினாத்தாள் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)  தெரிவித்துள்ளது.

குளிர்காலம் என்பதால் தேர்வுகள் காலை 11.30 மணி முதல் தொடங்கும்.

சிபிஎஸ்இ தேர்வு நடத்த முக்கிய தேதிகள்:

10ம் வகுப்பு தேர்வு நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 9ம் தேதி வரையும்,  12ம் வகுப்பு தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரையும் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுகள் கொள்குறி வகையிலான கேள்விகளை கொண்டதாகவும் மாற்றி அமைத்துள்ளது.

முதற் பருவத் தேர்வு:

கடந்த 2020ம் கல்வி ஆண்டில் இடம் பெற்ற பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் இந்த கல்வி ஆண்டில் இடம்பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது கொள்குறி வினாக்கள் கொண்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் முதற்கட்ட தேர்வு 90 நிமிடங்களும் இரண்டாம் கட்ட தேர்வு 120 நிமிடங்களும் நடக்கும்.

இது  தவிர இரண்டு கட்ட தேர்விலும் செய்முறைத் தேர்வுகள் இடம் பெறும். முதற்கட்டத்துக்கான செய்முறைகள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும்.

முக்கிய குறிப்பு:

இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!