முதல் பருவத்தேர்வு:
மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் முதல் கட்டமாக மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10, 12 ம் மாணவர்களுக்கு 2021- 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான முதல் பருவத்தேர்வை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
முதல் பருவத்தேர்வு நவம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கால அட்டவணை விரைவில் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியாகும். தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலை, ஏற்கெனவே பள்ளிகள் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தேர்வானது 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பருவத்தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!