ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி உயர்வு? மத்திய அரசு விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பணவீக்கத்தால் விலைவாசி தொடர்ந்து உயருகிறது. இதை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அவ்வகையில் ஜூலை – டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பல செய்தி ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இதனை அரசு ஊழியர்கள் நம்பி விடும் சூழல் உள்ளது. இதனால் மத்திய அரசு இது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பரவும் தகவல் பொய்யானது எனவும், இதுகுறித்து நிதியமைச்சகம் எந்த உத்தரவும் வெளியிடவில்லை எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அது தீபாவளி போனசாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!