ரேஷன் பொருட்கள் அனைத்தும் ஒரே தவனையில் பெற மத்திய அரசு உத்தரவு!!

இந்தியாவில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அரிசி, கோதுமை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி ரேஷன் கடைகளில் தலா நபருக்கு 5 கிலோ கோதுமை, அரிசியை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!