ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! கால அட்டவணை வெளியீடு

IMG_20220829_174157

2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண் .01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு

Notification: Click Here