அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும்பொருட்டும் புதிய பாடத்திட்டம் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய பாடத்திட்டம்:
புதிய பாடத்திட்டங்கள் நடப்புக் கல்வியாண்டிற்குள் எழுதி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்திய தொழிற்கூட்டமைப்பு, மகேந்திரா, எல் அண்ட் டி போன்ற தொழிற்சாலைகளின் பங்களிப்பு புதிய பாடத்திட்டத்தில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துவதற்காக பாடத்திட்டம் மாற்றி அமைக்கவுள்ளது.
இதன் மூலம் பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புதிய பாடத்திட்டங்கள் நிகழ் கல்வியாண்டிற்குள் எழுதி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!